திருச்சி அருகே
ரயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் பலி
போலீசார் விசாரணை.
திருச்சி- சென்னை ரயில் மார்க்கத்தில் ஸ்ரீரங்கத்தை அடுத்த பிச்சாண்டார் கோயில் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது சற்று தள்ளி 50 வயது மதிக்கத்தக்க பெண்பிணம் ஒன்றும் கிடத்துள்ளது. அடையாளம் தொயாத இரு உடல்களையும் கைப்பற்றிய ரயில்வே போலீசார் அவர்கள் யார் ? எந்த ரயிலில் அடிபட்டு இறந்தார்கள் ? தற்கொலையா ? கொலை செய்து பிணத்தை யாராவது வீசி விட்டு சென்றார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.