திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
திருச்சி எடத்தெரு கிருஷ்ணன் கோவில் தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கிழக்குப் பகுதி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் இந்து, முஸ்லிம் ,கிறிஸ்தவர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இதன் பின்னர் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழா ஏற்பாட்டினை ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ், மாநகர் மாவட்ட செயலாளர் லெனின்,பகுதி செயலாளர் சிவக்குமார், துப்புரவு சங்க மாவட்ட தலைவர் இளையராஜா, கிழக்கு பகுதி செயலாளர் ரெட்டமலை ஆகியோர் இந்நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.