திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம். திருச்சி அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
தேசிய பல்ஸ் போலியோ சொட்டுமருந்து வழங்கும் சிறப்புமுகாம் திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி பெரியமிளகுபாறை நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இன்று காலை 7 .30 மணிக்கு சுற்றுலத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தனர்.
அருகில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, சொட்டு மருந்து மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் பவானி உமாதேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம்.கணேஷ், மாநகராட்சி நகர் நல சுலுவலர் யாழினி,
கூட்டுறவு சங்க தலைவர்கள் வி.பத்மநாதன், ஏர்போர்ட் விஜி மற்றும் பலர் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மொத்தம் 2,62,642 உள்ளனர். இவர்களுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுசுகாதாரத்துறை மூலம் அனைத்து பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் தற்போது பல்வேறு பகுதிகளில் பெற்றோர் தங்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொண்டு செல்கின்றனர்.