பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.திருச்சியில் அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சி நடைபெற்றது.
இச்செயற்குழுக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மு.சௌந்தரராஜன் தலைமை வகித்தார்.
திருச்சி மாவட்டத் தலைவர் தொழர் நீ.தே.நாகராஜன் வரவேர்புரையாற்றினார்
மாநிலத் துணைத்தலைவர் தோழர் பா.சிவக்குமார் அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
கடந்தகால செயல்பாடுகள் குறித்து மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் வெ.செல்லையா அறிக்கை சமர்ப்பித்தார்.
வரவு செலவு அறிக்கையினை மாநிலப் பொருளாளர் இரா.பட்டாபிராமன் சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 30 மாவட்டங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விவாதித்தனர்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு, சரண் விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் ஆகியவற்றை மீள வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடத்தும் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் முழுமையாகக் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
2.
இளநிலை ஆய்வாளர் இருந்து முதுநிலை ஆய்வாளராகப் பதவி உயர்வு செய்யும்போது பதவி உயர்வு மூலம் 25 விழுக்காடும் நேரடி நியமனம் மூலம் 75 விழுக்காடும் என கடைப்பிடிக்கப்படும் விகிதாச்சாரத்தை மாற்றம் செய்து தகுதியுள்ள இளநிலை ஆய்வாளர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு அளித்து விட்டு எஞ்சியுள்ள முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களை உரிய விகிதத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப உரியவாறு தமிழ்நாடு சார்நிலைப்பணி விதிகளில் செய்திட துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களை மாநிலப் பதிவாளர் மூலம் கூறுவது என தீர்மானிக்கப்பட்டது.
3.
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3இல் உள்ளோர் பல ஆண்டுகளாக பதவி உயர்வு பெற இயலாத நிலை சூழலில் இளநிலை ஆய்வாளர் பதவி உயர்வுக்கான விகிதாச்சாரத்தை ஒருமுறை தளர்த்தி தற்போது பணியிலிருக்கும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3இல் உள்ளோர் அனைவருக்கும் இளநிலை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களை மாநிலப் பதிவாளர் அவர் மூலமாகக் கூறுவது என தீர்மானிக்கப்பட்டது.
4.
பதவி உயர்வுயின்றி நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளருக்கு இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் ஆகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பதவி உயர்வு வழங்க உரிய விதித் திருத்தம் செய்ய வேண்டுமாய் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது
5.
கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் மகளிர்க்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பை பணிகாலமாகக் கருதி பதவி உயர்வு வழங்க தகுதி காண் பருவம் நிறைவுக்கு ஆணை பெற்று தந்த துறையின் முதன்மைச் செயலர், மாநிலப் பதிவாளர், கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கி), பதிவாளரின் நேர்முக உதவியாளர் ஆகியோருக்கு மாநிலச் செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
6.
அவசர புள்ளிவிவரங்கள் முக்கியத் தபால்களை எடுத்துக்கொண்டு சென்னை பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் சார்நிலை அலுவலர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் தங்களது காலைக் கடன்களை நிறைவேற்றிட ஏதுவாக பதிவாளர் அலுவலகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் ஓர் ஓய்வுஅறை ஏற்படுத்தித் தரவேண்டும் எனப் பதிவாளர் அவர்களை மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
7.
கூட்டுறவுத் துறையில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள முதுநிலை ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் ஆகியோருக்கும் களப் பணியிடங்களில் பணியாற்றிவரும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் உட்பட அனைவருக்கும் சட்டப் பணிகள், நிர்வாகப் பணிகள் குறித்து மண்டல அளவில் பயிற்சி வழங்கிடப் பதிவாளரை மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
8.
தமிழ்நாடு சார்நிலைப் பணிகளில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இளநிலை ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டு முதுநிலை ஆய்வாளராக பதவி உயர்வு செய்யப்பட்டு மூன்று ஆண்டு பணி முடிக்காத காரணத்தால் கூட்டுறவு சார்பதிவாளர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, அவர்களது வயது மூப்பினையையும் பணி மூப்பு நிலையையும் கருத்தில் கொண்டு கீழ் நிலைப் பதவியில் மூன்றாண்டுகள் பணியாற்றியதாகக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூட்டுறவு சார்பதிவாளர் பதவி உயர்வினை முன்தேதியிட்டு வழங்கிட இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
இரண்டு கட்ட இயக்கம்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
15.02.2021 அன்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் இயக்கம் மற்றும் மின்னஞ்சல் பதிவஞ்சல் மூலமாக துறையின் முதன்மைச் செயலர், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறைச் செயலர், பதிவாளர் ஆகியோருக்கு முறையீடு செய்வது
12.03.2021 அன்று மாநிலப் பதிவாளர், துறைச் செயலர் ஆகியோரிடம் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முறையீடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.