திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, தொகுதிகளில் நடைபெற்ற தமிழ் மொழி காக்க இன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலகல்கண்டார்கோட்டை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழன் பிரசன்னா, நெல்லை மூர்த்தி ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தினை பொன்மலை பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
பேச்சாளர்கள், நிர்வாகிகள் , உடன்பிறப்புகள் உணர்வுப்பூர்வமாக பங்கெடுக்கும் இக்கூட்டங்கள் திமுகவின் ஓர் அடையாளம் ஆகும்.
இக்கூட்டத்தில் பகுதி கழக செயலாளர்கள் பகுதி கழக நிர்வாகிகள், கழக செயலாளர்,வட்ட கழக நிர்வாகிகள் ,இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் அணி, தொண்டர் அணி,மாணவர் அணி, நிர்வாகிகள் பலரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .