திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரம்பூர் கிழக்கு ஒன்றியம் வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் பூத் கமிட்டி உறுப்பினர்களை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் நேரடியாக சந்தித்து புதிய வாக்காளர் பட்டியலை அவர்களிடம் வழங்கி அவர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனையும் வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ராவணன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சுந்தரி, கலைப்பிரிவு ராஜா, பாலமூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.