Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் விடிய விடிய மழை. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

திருச்சியில் விடிய விடிய மழை. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

0

'- Advertisement -

திருச்சி மாநகர் புறநகரில் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது அந்த மழை தொடர்ந்து தற்போது வரை நிடித்தது வருகிறது .

Ad banner

குத்தால சாரல் போல் பெய்ய தொடங்கிய மழை இடையிடையே கனமழை பெய்தது திருச்சி மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. நேற்று மாலை முதல் பெய்துவரும் தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளது.

TVK ad

இன்று வெயிலின் முகத்தையே காண முடியவில்லை நிற்காமல் இடைவிடாது பெய்யும் மழையால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி உள்ளது.

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் 30 மில்லி மீட்டர் மழையும், லால்குடியில் 29 மில்லி மீட்டர்,நந்தியார் தலைப்பு 32 மில்லி மீட்டர், புள்ளம்பாடி 29 மில்லி மீட்டர்,தேவி மங்கலம் 28 மில்லி மீட்டர், சமயபுரம் 32 மில்லி மீட்டர், சிறுகுடி 15 மில்லிமீட்டர்,வாத்தலை அணைக்கட்டு 18 மில்லி மீட்டர்,மணப்பாறை 15 மில்லி மீட்டர், பொன்னணியாறு அணைக்கட்டு 27 மில்லி மீட்டர்,கோவில்பட்டி 13 மில்லி மீட்டர், மருங்காபுரி 25 மில்லி மீட்டர், முசிறி 16 மில்லி மீட்டர்,புலிவலம் 15 மில்லி மீட்டர்,த.ப்பேட்டை 26 மில்லி மீட்டர்,நவலூர் குட்டப்பட்டு 18 மில்லி மீட்டர்,துவாக்குடி 43 மில்லி மீட்டர், துறையூர் 15 மில்லி மீட்டர் ,பொன்மலை 24 மில்லி மீட்டர், ஏர்போர்ட் 23 மில்லிமீட்டர், ஜங்ஷன் 26 மில்லி மீட்டர், திருச்சி டவுன் 33 மில்லி மீட்டர் என மொத்தம் 540 மில்லி மீட்டர் அளவிற்கு திருச்சி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது.

சராசரியாக 21. 60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.