டாஸ்மாக் தவிர்த்து மற்ற கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்,
டாஸ்மாக் தவிர்த்து மற்ற கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்,
தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணிவரை கடைகளை திறக்க வியாபாரிகளுக்கு அனுமதி
தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணிவரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள்,வணிக வளாகங்களுக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதியில் இரவு 10 மணிவரை கடைகள் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதில் தமிழக அரசின் டாஸ்மாக் விற்பனை கடைகளுக்கு இப்போது போல் 8 மணி வரை மட்டுமே அனுமதி.