பாதையை காணோம். மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கத்தில் ஆர்ப்பாட்டம்
பாதையை காணோம். மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கத்தில் ஆர்ப்பாட்டம்
பாதையை காணோம்? – ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம்
பாதையை காணோம் என ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளித்திருமுத்தம் கிராமம் செக்போஸ்ட் அருகில் கொள்ளிடக் கரையில் பூசைகரை மண்டபம் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது வழிச்சாலையை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகவும், பொது மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த புறம்போக்கு 0.01228 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பாதையை மீட்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பாதையை திறந்து விடுகிறோம் என கூறிய பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த ஆர்பாட்டத்தில் CPI(M) மாநிலக்குழு ஸ்ரீதர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கம் பகுதி குழு மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்