Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலெக்டர் வளாகம் வாசலில் அரசின் எந்த விதிமுறையும் பின்பற்றாமல் தொடங்கப்பட்ட மனமகிழ் மன்றத்திற்கு அனுமதி வழங்கியது எப்படி?

0

'- Advertisement -

திருச்சி கலெக்டர் வளாகம் வாசலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மனமகிழ் மன்றத்திற்கு அனுமதி அளித்தது எப்படி? சமூக ஆர்வலர்கள் கேள்வி…

Ad banner

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின்படி (Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981), பதிவு செய்யப்பட்ட கிளப்புகள் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்படும் உரிமம் FL2 உரிமம் ஆகும். இதன் மூலம் மன்றத்தின் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படுகிறது.

​FL2 உரிமம் பெறுவதற்கும் பராமரிப்பதற்கும் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்த கடையில் பின்பற்றப்பட்டு உள்ளதா என்றால் இல்லை ..

​தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (Tamil Nadu Societies Registration Act) அல்லது கம்பெனிகள் சட்டத்தின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

​பொதுவாகக் குறிப்பிட்ட காலத்திற்கு (பொதுவாகக் குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள்) மன்றம் தொடர்ச்சியாகச் செயல்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட கணக்கு வழக்குகளைக் கொண்டிருக்க வேண்டும்.

​மன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் பட்டியல், அவர்களின் முகவரி மற்றும் உறுப்பினர் கட்டண விவரங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் (மினிட் நோட்).

​கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் (கோயில், மசூதி, தேவாலயம்), மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொலைவு (நகராட்சி/மாநகராட்சி பகுதிகளில் 50 மீட்டருக்கு அப்பாலும், பிற பகுதிகளில் 100 மீட்டருக்கு அப்பாலும்) அமைந்திருக்க வேண்டும்.ஆனால் இது இந்த கல்வி நிறுவனங்கள் ஆலயங்கள்  இவற்றைவிட முக்கியமாக பல்லாயிரக்கணக்கான கூறும் கலெக்டர் வளாகம் வாசலில் செயல்பட்டு வருகிறது ….

​மதுபானம் பரிமாறுவதற்குப் போதுமான பரப்பளவு கொண்ட தனி பார் மற்றும் மதுபானங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான தனியறை இருக்க வேண்டும்

.கேரம், செஸ், டேபிள் டென்னிஸ் போன்ற உள்ளரங்கு விளையாட்டு வசதிகள் இருப்பது முக்கியம்,ஆனால் இங்கு கேரம் போர்டு காயின் இல்லாத போது மட்டும் வைக்கப்பட்டுள்ளது . . .

​ மன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான வாகன நிறுத்துமிடம் , கழிப்பறை வசதிகள் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும்.

​மன்ற வளாகத்திற்குள் முறையான சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

மதுபானக் கொள்முதல் மற்றும் பரிமாறும் விதிமுறைகள்: மதுபானங்களை டாஸ்மாக் (TASMAC) மொத்த விற்பனைக் கிடங்குகளில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்; வெளி இடங்களிலோ அல்லது கள்ளச் சந்தையிலோ வாங்கக் கூடாது.

​மன்றத்தின் பதிவுபெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பதிவு செய்யப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டுமே மது பரிமாறப்பட வேண்டும். பொதுமக்களுக்கு மது விற்க அனுமதி கிடையாது.

​21 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் மதுபானம் வழங்கவோ, பார் பகுதிக்குள் அனுமதிக்கவோ கூடாது.

​பார் கவுண்ட்டர் திறக்கும் மற்றும் மூடும் நேரத்தை அரசு உத்தரவின்படி மிகக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பார் பகுதியிலிருந்து மதுபானங்களை வெளியே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

​உள்ளாட்சி அமைப்பின் கட்டட அனுமதி மற்றும் வணிக உரிமம்.

​தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தடையில்லாச் சான்றிதழ்

​காவல் துறையின் தடையில்லாச் சான்றிதழ்

​உணவுப் பாதுகாப்புத் துறையின் FSSAI உரிமம் வாங்கி இருக்க வேண்டும் ….

 

​அரசு நிர்ணயித்த ஆண்டுக் கட்டணம், முத்திரைக் கட்டணம் மற்றும் தேவையான பிணை வைப்புத் தொகை ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.

​அனைத்து ஆவணங்களும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கலால் அதிகாரிகளால் கள ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகே FL2 உரிமம் வழங்கப்பட என்ற விதிமுறைகள் உள்ளது.

 

இந்த விதிமுறைகளை திருச்சி கலெக்டர் வளாகம் எதிரில் தொடங்கப்பட்டுள்ள மணமகிழ் மன்றத்தில் எதுவும் பின்பற்றப்படவில்லை …. இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது உரிமம் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் என அரசாணை இருந்தும் இந்த மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை முறைப்படி திருச்சி மாவட்ட எஸ்ஆர்எம் ஆய்வு செய்தாரா இல்லை கையூட்டு பெற்றுக் கொண்டு அறிக்கையை தாக்கல் செய்தாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.