திருச்சி மாவட்ட நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது .

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மூத்த வழக்கறிஞர் D.ஸ்டானிஸ்லாஸ் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது …
மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது .
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிபதி
கிறிஸ்டோபர் அவர்கள் மூத்த வழக்கறிஞர் D.ஸ்டானிஸ்லாஸ் அவர்களின் 89 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் ..
மேலும் மாண்புமிகு நீதிபதிகள் R. மாலதி ( குடும்ப நல நீதிமன்றம்) மாண்புமிகு முத்துமீனா ( கூடுதல் மகிழா நீதிமன்றம்) மாண்புமிகு அனு சுருதி (jm1), மாண்புமிகு முகமது சுகைல் (jm3), மாண்புமிகு பரம்வீர்(jm2), மாண்புமிகு சுப்பிரமணி (jm6), மாண்புமிகு டார்வின் முத்து (jm5) ஆகியோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர்
பி. வி.வெங்கட்,
துணைத் தலைவர்கள் வரகனேரி சசிகுமார் மற்றும் பிரபு, இணைச் செயலாளர் விஜய் நாகராஜன் முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, ஜெயராமன், இரண்டாவது கூடுதல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எழிலரசி, செயற்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி, பிரியா, கௌசல்யா, ரத்தனகிரி, முனீஸ்வரன், மீனா, பாலாஜி, ரங்கீலா, கனிமொழி மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

