
ஏ டி எம் மையத்தில் குவிந்துள்ள குப்பைகள்.
கண்டுகொள்ளாத வங்கி நிர்வாகம்.
திருச்சியில், ஏடிஎம் மையம் ஒன்று,முறையான பராமரிப்பு இல்லாததால், வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது.
இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த மையத்தில் வங்கி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை.
அருகிலேயே எப்பிஐ, ஆசிஸ் வங்கி மற்றும் இரு தனியார் ஏடிஎம் மையங்கள் இருந்தும் அவை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட இந்த ஏடிஎம் மையம் மட்டும் எப்போதும் குப்பையாக உள்ளது. குளிர்சாதன இயந்திரம் (ஏசி) இயங்குவதில்லை. மையத்தின் கதவு திறந்தால் மூட முடியாது, மூடினால் திறக்க முடியாத அளவுக்கு பழுதாகி தரையுடன் உரசுகிறது. மேலும் உள்ளே குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
கதவு மூடப்பட முடியாத நிலையில் உள்ளதால், மழை நேரங்களில் நாய்கள் உள்ளே சென்று தங்கி விடுகின்றன.
வங்கி வாடிக்கையாளர்கள் இது குறித்து வங்கி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

