Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் கலைஞரின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி உறையூர் எஸ்.எம்.மேல் நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி உறையூர் பகுதி திமுக, சுரபி தொண்டு நிறுவனம், மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை மற்றும் ரெத்னா குளோபல் மருத்துவமனை இணைந்து உறையூர் பகுதி செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாமை மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

TVK ad

இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கண்ணன், கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி வட்டச் செயலாளர் கமால், திருநாவுக்கரசு, முத்துப்பழனி, தனபால், தர்மு சேகர், ஹரிஹரன், ஆசைத்தம்பி, ஸ்டைல்ராஜ், நாகூரம்மாள் மற்றும் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை மேலாளர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுரபி தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் செந்தில் சின்னதுரை சிறப்பாக செய்து இருந்தார்.

இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.