Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முறைப்படி வீடுகள் ஒதுக்கக் கோரி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி பாலக்கரையில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம்.

TVK ad

திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு கல்மந்தை காலனியில் 25 ஆண்டுகளாக குடியிருந்து வந்த 128 பயனாளிகளுக்கும் முறையாக விசாரணை செய்து ஆவணங்களின் அடிப்படையில் வீடுகள் ஒதுக்கிட வேண்டும். குடியிருந்த மக்களிடம் ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை அடிப்படையில் விசாரணை செய்து வீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கல் மந்தை காலனி பொதுமக்கள் திருச்சி பாலக்கரையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வு மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு ரங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளஞ்சியம், மகாலிங்கம், அழகம்மாள் சத்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.