Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 481 கிலோ கலப்பட டீ தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை
அதிகாரிகள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்
ரமேஷ்பாபு தலைமையில் திருச்சி கே. கே.நகர்
பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடையில்
சோதனை நடத்தினர்.

Ad banner

அப்போது அந்த
டீக்கடையில் 6 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்
செய்யப்பட்டது.

மேலும் அந்த
கடையின்
உரிமையாளரின் சகோதரர்கள் கருமண்டபம் மற்றும்
பொன்னகரில் வைத்திருந்த டீக்கடைகளில்
சோதனை செய்தபோது அங்கு 160 மற்றும் 240
கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர கே.கே. நகர் பகுதியில் இன்னொரு
டீக்கடையில் 75 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்
செய்யப்பட்டது.

மொத்தம் 481 கிலோ கலப்பட
தேயிலை தூளை பறிமுதல் செய்த அதிகாரிகள்
அதனை உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி
வைத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.