அரியமங்கலம் கோட்டத் தலைவருக்கு மக்கள் ஆதரவு.
திருச்சி அரியமங்கலம் கோட்டத் தலைவர் ஜெ நிர்மலாவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருச்சி மாநகராட்சி 32வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினர் என்ற பதவி கிடைத்தது……
அதன் பிறகு மக்களிடையே அவருக்கு கிடைத்த ஆதரவு காரணமாக அரியமங்கலம் கோட்ட தலைவராக அந்தஸ்து உயர்ந்தது….அவர் தற்போது 32வது வார்டு பகுதியில்வசித்து வருகிறார் அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியான படையாட்சி தெரு மரியம் நகர் கீரை தோட்டம் அருள் ஆனந்தபுரம், அன்னை நகர், மல்லிகைபுரம், இருதயபுரம் ஆசாரி தெரு ,சர்பத் முதலியார் தெரு ஆகிய பகுதிகளில் நேரில் சென்று மக்களை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவரது வார்டு பகுதியில் சாக்கடை பிரச்சனை,குடிநீர் பிரச்சனை,சாலை பிரச்சனை ஆகிய அடிப்படை தேவைகளை கேட்டறிந்து திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு மேற்கொள்கிறார். அவரது வார்டு பகுதியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்கேற்று சிறப்பு செய்கிறார்கள் முக்கிய தலைவர்கள் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடத்தியுள்ளார்.
சிறப்பாக செயல்படும் அரியமங்கலம் கோட்ட தலைவர் ஜெயநிர்மலாவுக்கு பொதுமக்கள் சார்பாக தர்மநாதபுரம் கோவில் முன்னாள் தலைவர் இறைவன், பந்தல் ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்..