பங்குகளை விற்க கூடாது என வலியுறுத்தி
திருச்சியில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
மத்திய அரசு எல்ஐசி பங்குகளை நேற்று முதல் வருகிற 9ந் தேதி வரை விற்க திட்டமிட்டு உள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் ஜங்ஷன் செல்லும் சாலையில் உள்ள எல்ஐசி அலுவலக வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜோன்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான எல்ஐசி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்தம் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.
மேலும் ஒத்தக்கடை கிளை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.