திருச்சியில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் வீடு வீடாக சென்று 2000 மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
ரம்ஜானை பெருநாளை முன்னிட்டு திருச்சி பீமநகர் பகுதியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இத்தொழுகை முடிந்த பின் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கூறும்போது:
இஸ்லாமியர்கள் 30 நாட்கள் கடுமையான நோன்பிருந்து தற்போது ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடிகிறார்கள்.
அந்த வகையில் திருச்சி பீமநகரில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
மேலும் எங்களது அமைப்பின் சார்பில் குறைந்தபட்சம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் மதிய உணவாக பிரியாணி அவர்கள் இல்லம் தேடி வழங்கப்பட்டது.
அதாவது நாங்கள் உண்ணும் உணவே அனைத்து சமுதாய மக்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.
இதற்காக இறைவனுக்கும், அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் கூறினார்.