Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அமமுக பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் தனது 9 ஆண்டு கால அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்.

0

'- Advertisement -

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொன்மலை பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சங்கர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மன வருத்தத்துடன் ராஜினாமா .

Ad banner

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அன்பார்ந்த நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்..

, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம் இல்லாமல் கட்சிப் பணி ஆற்றி வருகிறேன்.

ஆனால் சாதாரண தொண்டனாக, பகுதி செயலாளராக வழி நடத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், தொடர்ந்து பணியாற்றும் சூழ்நிலைகள் இல்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

,அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக 1996-ம் ஆண்டு புரட்சிதலைவி அம்மா அவர்களின் தொண்டனாக இணைந்தேன்.

புரட்சித்தலைவி அம்மா இருந்த காலத்தில் “அம்மா” என்ற ஒரு பெயரே போதுமானதாக இருந்ததால், என்னை போன்றவர்களுக்கு, தேர்தல் காலங்களை தவிர மற்ற நேரங்களில் எந்த தேவையும் இல்லாமல் இருந்தது

ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த பின் உருவான அசாதாரண சூழ்நிலைகளை, ஒட்டுமொத்த இந்தியாவும் அறியும்.

தூங்கவிடாமல் செய்த நிகழ்வுகள், என்னை, அதுவரை நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையில் இருந்து, எனது குடும்பத்தின் சம்மததுடன் முழுவதுமாக வெளியேறச் செய்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைத்தது.

அன்று முதல் இன்று வரை நான் வகித்த பதவிகளுக்கு எந்த சமரசமும் இல்லாமல், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை நீங்கள் அறிவீர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக, எனது குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கூட எனக்கு தெரியாது. வேறு எந்த தொழிலிலும் கவனம் கொள்ளாமல், முழு நேர ஊழியனாக கட்சி பணிகள் மட்டுமே செய்து வந்தேன் .

எத்தனையோ போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என்று எந்த எதிர்பார்ப்புமின்றி நிர்வாகிகள், ரத்தத்தை வியர்வையாக சிந்தி இந்த இயக்கத்தை திருச்சியில் வளர்க்க இயங்கி வந்தாலும், கடந்த சில மாதங்களாக, இயக்கத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளால் எங்களைப் போன்றோருக்கு ஏகப்பட்ட நெருடல்கள்.

“பகையாளிகள் பங்காளிகளாக” மாறிப்போனதால் ஆதாயம் யாருக்கு என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்புகள் என்பது எங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கு மட்டுமே.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், கூட்டணி தர்மத்தை மீறி எத்தனையோ நிகழ்வுகள், மிகுந்த மன அழுத்தத்தையே தந்தது. மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளைச் செயலாளர் வரை நாங்கள் பட்ட மன உளைச்சலுக்கு அளவே இல்லை.

ஆனால், அத்தனை மன அழுத்தங்களையும் மீறி இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற கடமையால்,

தேர்தலுக்கு முன் இயக்கத்தில் இருந்து விலகினால், ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் நிராயுதபாணியாக விட்டுவிட்டு செல்ல நேரிடும் என்பதால், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேச்சுக்கு கட்டுப்பட்டு தேர்தல் முடியும் வரை பொறுத்துக் கொண்டு பணியாற்றினேன்.

இப்பொழுது, தேர்தல் முடிந்த பின்பு, எனது ராஜினாமா யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தெளிவுடன் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.

இந்த இயக்கத்திற்காக எத்தனையோ இழப்புகளை தாங்கி வேலை செய்த நிர்வாகிகளுக்கு, ஏதும் செய்ய முடியாத நிலையும், அவர்களுக்கு தலை குனிவை உருவாக்கிய நிகழ்வுகளும், சூழ்நிலைகளும் தொடர்வதால், எனது அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்.

இந்நாள் வரை, என் கடமையை சரிவர செய்த பின், இந்த முடிவை நிமிர் நெஞ்சுடன், தெளிந்த நீரோடையாக அறிவிக்கிறேன்.

எத்தனையோ இழப்புகள் இருந்தாலும், ஒன்பது வருடம் என்கின்ற “காலம்” & “உழைப்பு” என்கின்ற ஈடுகெட்டவே முடியாத, விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை நாங்கள் வீணாக்கி விட்டோம்.

இதுநாள் வரை என்னை அரவணைத்து, எனக்கு வழிகாட்டியாக, உற்ற தோழனாக, தோளோடு தோள் நின்று பணியாற்றிய ஒவ்வொரு நிர்வாகிக்கும், முக்கியமாக மக்கள்செல்வர் அவர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனையோ போராட்டங்களில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குடும்பத்தையும் குழந்தைகளையும் சமாளித்து, தன்னார்வத்துடன் பங்கேற்று, கைது செய்யப்பட்டும் கலங்காத அனைவருக்கும் பொற்பாதங்களை தொட்டு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு உற்ற துணையாக பொன்மலை பகுதி வட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

“எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…

எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..

எதற்காக போரிட்டோமோ…

அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்…

மடிந்து போவது அப்பாவி போர்வீரர்களே.

காலமும், தெம்பும், தெளிவும் இருப்பதால்….

மீண்டு வருவோம்.

மீண்டும் வருவோம்.”

என்றென்றும் நன்றியுடன் சங்கர் பொன்மலை பகுதி செயலாளர், மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.