வண்டியின் பதிவு எண்
கே.என்.நேரு !
அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திமுக விஷமிகள் திருச்சியில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களில்

உள்ள நம்பர் பிளேட் இருக்கும் இடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாங்கிய பதிவு எண்களை நீக்கிவிட்டு கே.என்.நேரு என்று எழுதிக்கொண்டு திமுக பிரமுகர்கள் சுற்றிக்கொண்டு திரிகின்றனர்.
தற்போது நான்கு சக்கர வாகனங்களிலும் நம்பர் பிளேட் இருக்குமிடத்தில் கே என் நேரு என்று எழுதி வைத்துள்ளனர்.
இதுபோன்று செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களை அமைச்சருக்கு வேண்டியவர்கள் என காட்டிக் கொள்வது போல் நடித்து
காவல் துறையிடம் இருந்து துறையிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள இந்த செயல்களில் ஈடுபட்டு வருவதாக திமுக பிரமுகர்கள் கூறிவருகின்றனர்.
உண்மையான திமுகவினர் மற்றும்அமைச்சர் கே.என். நேருவின் விசுவாசிகள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது இல்லை. இது அமைச்சர் கே என் நேரு விற்கு தெரிய வருமா உடனடியாக இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வருபவரை திமுக தலைமையிடம் கண்டிக்குமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் .