Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன்’

ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன்'

0

'- Advertisement -

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். இதில் போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

Ad banner

இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழில் அதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மிரட்டி பணம் பறிக்கும் விசாரணையில் பூஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் விஜிலென்ஸ் குழுவினால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் (என்சிபி) சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) பூஜா தத்லானி கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.