Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் சிலைக்கு கதர் ஆடை அணிவித்து மக்கள் சக்தி இயக்கம் கொண்டாட்டம்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் சிலைக்கு கதர் ஆடை அணிவித்து மக்கள் சக்தி இயக்கம் கொண்டாட்டம்.

0

'- Advertisement -

மக்கள் சக்தி இயக்க சார்பில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு கதர் ஆடை போர்த்தி, மரக்கன்றுகள், வழங்கி காந்தி ஜெயந்தி விழா பொன்மலையில் கொண்டாட்டப்பட்டது.

Ad banner

மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், கலைக்காவிரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும், தண்ணீர் அமைப்பு செயலாளருமான தி. சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காந்தியின் சிலையிற்கு மாலையிற்கு பதிலாக “கதருடைகளை உடுத்துவோம்: நெசவாளர்களை உயர்த்துவோம் ”

என நோக்கத்தில் கதர் ஆடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மாகாந்தி பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இயற்கையை பாதுகாக்க வேண்டி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது .

மேலும் உன்னதமான தமிழகம் காண , முழுமையான மது விலக்கை ஆதரீப்பீர் , என விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.

நிகழ்வுவிற்கு மக்கள் சக்தி இயக்க மாநகர நிர்வாகி விஜயகுமார் , மகளிர் அணி கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன் , லலிதா, எம்.நரேஷ்குமார் , வெங்கடேஷ், தயானந்த், மற்றும் பலர் கலந்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.