திருச்சி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான மிதிவண்டி பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான மிதிவண்டி பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், இந்தியா சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக அமுத பெருவிழா நிகழ்ச்சி மத்திய அரசு மற்றும் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது,
அதன் ஒருபகுதியாக அண்ணாநகர் இணைப்பு சாலை உய்யகொண்டான் கால்வாய் ஒட்டி அமைந்துள்ள (மேற்கு பகுதி) சாலையில் யோகாசனம் பயிற்சி நிகழ்ச்சிய நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகளிர்களுக்கான மிதிவண்டி பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அண்ணா நகர் இணைப்பு சாலை புறநகர் பேருந்து நிறுத்தம் முதல் தென்னூர் அறிவியல் பூங்கா வரை இப் பேரணி நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் நகர பொறியாளர் அமுதவல்லி செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் உதவி ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் மகளிர்கள் மிதிவண்டியுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.