வஉசி 150வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது உருவச்சிலை திருச்சியில் அனைத்து கட்சியினர் மற்றும் சமுதாய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை.
வ.உ. சிதம்பரம் பிள்ளை 150 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திருச்சியில் உள்ள அனைத்துக் கட்சியினர் மற்றும் சமுதாய பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட செயலாளர் இன்டர்நெட் ரவி தலைமை தமிழ் மாநில காங்கிரசார்.
அதிமுக சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுகவினர்
இதில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் சிவபதி, இணைச் செயலாளர் சீனிவாசன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,சிந்தை முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்திய நாடார் பேரவை
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில பொருளாளர் சிவசுப்பிரமணியன் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பாரதிய ஜனதா கட்சியினர்
இதில் வரகனேரி பார்த்திபன், மாவட்ட செயலாளர்கள் இந்திரன், சிட்டிபாபு, மாநில மகளிரணி செயலாளர் லீமோ சிவக்குமார், பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தேமுதிக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் மாநில மாணவரணி செயலாளர் ஏ.எம்.ஜி விஜயகுமார், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஐயப்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ப்ரீத்தா விஜய் ஆனந்த் மற்றும் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் மாநில பொருளாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடா திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான மனோகரன் தலைமையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஒத்தக்கடை , பெஸ்ட் பாபு,பகுதி செயலாளர்கள் சங்கர், கல்நாயக் சதீஷ் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ்
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாவட்ட துணைத்தலைவர் பண்ணை கோபாலகிருஷ்ணன், வக்கீல் செந்தில் நாதன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஹேமா, மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம்.சரவணன், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ஓவியர் கஸ்பர், பட்டதாரி அணி தலைவர் ரியாஸ், மீனவர் அணி தலைவர் தனபால் காங்கிரஸ் நிர்வாகிகள் சரவணன், அண்ணா சிலை விக்டர், பார்த்தசாரதி புத்தூர் அன்பழகன், சத்தியநாதன், ரயில்வே சரவணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே.டி.ஆர் சுரேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர், பொருளாளர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.