புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தை கண்டித்து, திருச்சியில் மனுக்களுக்கு அஸ்தி பூஜை.இந்து திருக்கோயில் மீட்பு இயக்கம் அறிவிப்பு
இந்து சமய அறநிலைத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து மனுக்களுக்கு அஸ்தி பூஜை!
இதுகுறித்து திருச்சி இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தை சேர்ந்த ஆ. வையாபுரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அறநிலையத்துறையில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது எப்போது?

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் சொத்துகளைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து குரல் கொடுத்து, நிர்வாகத்தில் நடைபெறும் குறைபாடுகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறோம்.
இந்நிலையில், எங்களது நியாயமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகள் தொடர்பாக அளிக்கப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம்!
மேலும், அறநிலையத்துறையின் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியதற்காகப் பழிவாங்கும் நோக்கில் எங்களது உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் கருதுகிறோம்.
எனவே, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிர்வாக அலட்சியத்தையும், எங்களது உரிமைகளைப் பாதிக்கும் செயல்பாடுகளையும் கண்டித்து, விரைவில் திருச்சி புத்தூர் பகுதியில் மகாத்மா காந்தியின் அஸ்தி அமைந்துள்ள இடத்தில் மனுக்களுக்கு அஸ்தி பூஜை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
அறநிலையத்துறையின் நிர்வாகம் சீர்பெறுமா?நியாயமான மனுக்களுக்கு நீதி கிடைக்குமா?
திருக்கோயில் சொத்துகளைப் பாதுகாக்கக் குரல் கொடுப்பவர்களின் உரிமைகள் காக்கப்படுமா?
என்பதே எங்களது கேள்வி!
என தனது அறிக்கையில் கூறியுள்ளார்

