Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 7 பேர் கைது . 1 .200 கிலோ கஞ்சா பறிமுதல்..

0

'- Advertisement -

திருச்சியில்  கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 7 பேர் கைது 1.200 கி கஞ்சா பறிமுதல்..

Ad banner

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அரியமங்கலம், பாலக்கரை, திருச்சி அரசு மருத்துவமனை, கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 23) என்பவர் முல்லை நகரில் கஞ்சா விற்பனை செய்ததாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதே போல் திருச்சி காஜாமலை ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியை சேர்ந்த அபூபக்கர் (வயது 44) என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக பாலக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் புங்கனூர் ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த சியாம் மற்றும் கீர்த்திஷ்வரன் ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை விற்பனை செய்தனர். அதன் பேரில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை போலீசார் கீர்த்தீஸ்வரனை கைது செய்தனர்.

மேலும் இதே போல் எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்த மதிவாணன் (வயது 38) என்பவர் வழி விடு முருகன் கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்த சியாம் என்பவரை திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் தேடி வருகின்றார்கள். இவர்களிடம் இருந்து மொத்தம் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 100 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.