Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மது வாங்கித் தராத வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது, 2 பேருக்கு வலை ..

0

'- Advertisement -

திருச்சியில் மது வாங்கித் தராத வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது, 2 பேருக்கு வலை ..

 

Ad banner

திருச்சி தில்லைநகர் 10 வது கிராசை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் சம்பவத்தன்று 80 அடி ரோட்டில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 23), அஜித்குமார் (வயது 28),ரஞ்சித், செந்தில் ஆகிய நான்கு பேரும் அங்கு வந்து ராஜாவிடம் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ராஜாவுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும் ராஜாவின் இளைய சகோதரரான மணிகண்டன் என்பவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரஞ்சித் மற்றும் செந்தில் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.