Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி – ஆணையர் நே.பொன்மணி தொடங்கி வைத்தார்.

0

'- Advertisement -

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி –

Ad banner

ஆணையர் நே.பொன்மணி இன்று (03.11.2026) தொடங்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் மைய அலுவலகம் முன்பு பள்ளி, மாணவ, மாணவிகள், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முதல் அமெரிக்கன் மருத்துவமனை வரை 700 க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்ட பேரணியை ஆணையர் நே.பொன்மணிஅவர்கள் இன்று (03.11.2026) தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார் .

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் காலத்தில் நிரந்தரமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டிடங்களிலும் மழைநிரை சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். இப்பணியை அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாமல் அனைத்து தனியார் இல்லங்களிலும் ஏற்படுத்த வேண்டுமென்றும், இதனால் ஏற்படும் நன்மைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஆணையர் நே.பொன்மணி அவர்கள் தெரிவித்ததாவது, “மழைநீர் சேகரிப்பு என்பது மழைக்காலத்தில் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இல்லாமல், ஆண்டு முழுவதும் தொடர வேண்டிய நீர் பாதுகாப்பு நடவடிக்கையாகவும், “மழைநீர் சேகரிப்பு மக்கள் இயக்கமாகவும் இருக்க வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை முறையாகப் பராமரிப்பதுடன், அவற்றில் உள்ள அடைப்புகளை நீக்கி, வண்டல் மண்ணை அகற்றி, பழுதடைந்த பகுதிகளைச் சீரமைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாநகராட்சி 5 மண்ட்லம் வாடுகள் முழுவதும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

 

மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை எவ்வாறு அமைப்பது, அவற்றைப் பராமரிப்பது, மழைநீரைச் சிறப்பாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்கள் பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துணை மேயர் ஜி. திவ்யா. நகர பொறியாளர் திரு. அண்ணாதுரை, மண்டல தலைவர்ககள் துர்கா தேவி , பி ஜெயா நிர்மலா , செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் , உதவி செய்ய பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.