Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூர் தவெக எம் எல் ஏ நவல்பட்டு விஜி பதவி விலக வேண்டும்;திமுக கவுன்சிலர் புலவர் செந்தில் திருச்சி கமிஷனரிடம் பரபரப்பு புகார்

0

'- Advertisement -

திருச்சி திருவெறும்பூர் அணுகுசாலையில் இருவழிப் பயணியர் நிழற்குடை நெடுஞ்சாலைத்துறையால் அகற்றம் …

Ad banner

இவ்விவகாரத்தில் திமுக மாமன்ற உறுப்பினர் செந்தில் மீது அவதூறு பரப்பிய திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறை தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

 

திருச்சி–தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் பகுதியில் உள்ள அணுகுசாலையில் பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருச்சி–தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூரில் உள்ள அணுகுசாலையில் நெடுஞ்சாலைத் துறையினரால் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிழற்குடை தற்போது அகற்றப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நிழற்குடை அகற்றப்பட்டதற்கான காரணம் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும் மழையிலும் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, பொதுமக்கள் 43-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திமுக நிர்வாகிகள் தலைமையில் அப்பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்து வந்த திருவெறும்பூர் போலீஸார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிழற்குடை அகற்றப்பட்டதற்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தனர்.

 

அந்த பேருந்து கொட்டகைக்கும் பின்புறம் டாட்டா ஜவுளிக்கடை திறக்க உள்ளதாகவும்

அவர்கள் கடைக்கு இந்த பயணியர் நிழற்குடை இடையூறாக இருப்பதாகவும் அதை அகற்ற சொல்லி அந்த கடை உரிமையாளர் நகாயில் ( NAHI ) மனு அளித்ததின் பெயரில் அகற்றப்பட்டதகவும்

இந்த உண்மை நிலவரத்தை அறியாமல் திருவெறும்பூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி மாமன்ற உறுப்பினர் செந்தில் மீது கையூட்டு பெற்றதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மனில் மகேஷ் பொய்யாமொழி அவர்களைப் பற்றி தொடர்ந்து தவறுதலாக அவதூறு பரப்பி வருவதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டு காவல்துறை தலைவரிடம் மனு அளித்தார்.

மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்.மேலும் பேட்டியளித்த போது நான் கையூட்டு பெற்றதை தவெக சட்டமன்ற உறுப்பினர் நிரூபித்தால் நான் மாமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தயார் எனவும் அவ்வாறு நிரூபிக்க தவறிய பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி அப்பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.