திருச்சியில் முதியவரிடம் நூதன முறையில் ஆன்லைனில் ரூ . ஒரு லட்சத்து 11 ஆயிரம் பணம் மோசடி
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
திருச்சி பொன்நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 64) இவர் தனியார் கம்பெனியின் கஸ்டமர் சர்வீஸ் போன் எண்னை கூகுளில் தேடிக் கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு மர்ம ஆசாமி இவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு தான் உதவி செய்வதாக கூறி ஏமாற்றி அவரை ஆன்லைனில் வர சொல்ல சில நிமிடங்களில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 11 ஆயிரம் பணத்தை எடுத்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த மாணிக்கம் தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மாணிக்கம் திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

