Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 27 ந் தேதி தமிழ்நாடு கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பு உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

0

'- Advertisement -

மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி

Ad banner

திருச்சியில் 27 ந் தேதி தமிழ்நாடு கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பு  உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர், வழக்கறிஞர் கைலாசம், மாநிலச் செயலாளர் லோகநாதன், மாநில பொருளாளர் சாமிநாதன் ஆகியோரின் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட கட்டுமானத் தொழிலைச் சார்ந்த பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், மணல் லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கவும், கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27ந் தேதி திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருச்சி, தஞ்சை, நாமக்கல், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், மணப்பாறை, விராலிமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.