Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநில தடகளப் போட்டிக்கு தகுதி பெற்ற திருச்சி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.

0

'- Advertisement -

மாநில தடகளப் போட்டிக்கு தகுதி பெற்ற திருச்சி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு…

Ad banner

தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வுப் போட்டியில், பாப்பாகுறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர். அனிஷா பேகம், நிரஞ்சனா ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.

80மீட்டர் மற்றும் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இரு மாணவிகளும் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அப்துல் ஜாபர் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் எஸ். எஸ். ரஹமத்துல்லா, முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் சரவணன், ஆசிரியர் சங்கச் செயலாளர் ஆறுமுகம், பள்ளியின் விளையாட்டு ஆசிரியர்கள் செல்வி, ஹெலன், லோகேஷ், பாரடெஸ் அகாடமி பயிற்சியாளர்கள் நிவாஸ், சேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

மாணவிகளின் இந்த வெற்றி பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.