Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்.

0

'- Advertisement -

திருச்சி அரியமங்கலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்.

Ad banner

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருவெறும்பூர் பகுதி அரியமங்கலம் கிளை கலிபா பள்ளிவாசல் இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னேற்பாட்டில் தமுமுக மாவட்ட தலைவர் ஜெ.முஹம்மது ரபிக் முகாமை தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மமக மாவட்ட செயலாளர் இம்ரான், மாவட்ட பொருளாளர் நசீர், துணைத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ், ஜமாத் செயலாளர் முஹமத் ஆபிஸ் செயற்குழு உறுப்பினர் சபீர் துணைச் செயலாளர் உஸ்மான் இளைஞரணி பொருளாளர் முஜீப், மருத்துவ அணி மண்டல செயலாளர் தல்காபாபு, செயலாளர் முபாரக் துணைச் செயலாளர் ஜஹாங்கீர் முன்னிலை வகித்தனர்.

முகாமை துவங்கி வைத்து உரையாற்றிய மாவட்ட தலைவர் தமுமுக சேவை குறித்து விளக்கினார். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொண்டனர்.

துணை நிர்வாகிகள் அசாருதீன்,பீனிக்ஸ் ராஜா,அப்துல் நாசர், காஜாமைதீன், இப்ராஹிம், திருவரம்பூர் பகுதி நிர்வாகிகள் அரியமங்கலம் கிளை தலைவர் ஜாகீர், நிர்வாகிகள் பிலால்சா, ஜாகிர், நாயக், அப்துல் ரகுமான் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.