Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் விவசாயிகளை மாநகராட்சி நிர்வாகம் இடையூறு செய்கிறது .. குறை தீர் கூட்டத்தில் அய்யாக்கண்ணு புகார்..

0

'- Advertisement -

Ad banner

திருச்சி உறையூர் பகுதியில்  காய்கறி விற்கும் விவசாயிகளை மாநகராட்சி நிர்வாகம் இடையூறு செய்கிறது  குறை தீர் கூட்டத்தில் அய்யாக்கண்ணு புகார்..

திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது

இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு ,மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் அய்யாகண்ணு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசும்போது மேட்டூர் நீர்மட்டம் 70 அடிக்கு கீழே சென்று விட்டது இன்னும் ஐந்து நாட்களுக்கு கூட தண்ணீர் திறந்து விட வாய்ப்பே இல்லை.

வெள்ளம் வந்தால் தான் தண்ணீர் திறப்பு என்று கூறும் கர்நாடக அரசிடமிருந்து நஷ்ட ஈடு பெற்று விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருச்சி மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உறையூரில் உள்ள காகபுஜண்டர் சித்தர் கோவில் அளந்து வேலி போடாத காரணத்தினால் கஞ்சா மற்றும் போதை விற்பதுடன் சட்டவிரோத செயல்களுக்கு அந்த வளாகத்தில் நடைபெறுகிறது, இதை தடுக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறையூர் வாத்துக்காரர் தெரு பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பொதுமக்கள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை அதே பகுதியில் விற்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் இடையூறு அளிக்கிறது இதனை தாங்கள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உயக் கொண்டான் வாய்க்காலில் கோர்ட் அருகில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.