Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக ரேப்பீஸ் தினத்தில் மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை மாநகராட்சி ஆணையர் பொன்மணி இன்று தொடங்கி வைத்தார்கள் .

0

'- Advertisement -

உலக ரேப்பீஸ் தினத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் நே. பொன்மணி அவர்கள் இன்று திங்கட்கிழமை (28.09.2026 ) தொடங்கி வைத்தார்கள் .

Ad banner

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரோபரியாக சுற்றி தெரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணிகள் ஜனவரி-2025ல் மேற்கொள்ளப்பட்டது.

 

திருச்சியில் உள்ள மொத்த நாய்கள் எண்ணிக்கை 43767 கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் 36090 மீதமுள்ள கருத்தடை செய்யப்படாத நாய்கள் 7677 கருத்தடை செய்யப்பட உள்ளது .

மேலும் ,தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் கடந்த ஆண்டில் 5000 தெருநாய்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் 10000 தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குநர் டாக்டர். ரவிச்சந்திரன், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர். கார்த்திகேயன், உதவி இயக்குனர் டாக்டர். கீரை தமிழ் அசோகன் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.