Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அனைத்து ரேஷன் கடைக்கும் உதவியாளர் நியமிக்க ரூ.6000 வழங்க வேண்டும். திருச்சியில் நடைபெற்ற ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை.

0

'- Advertisement -

அனைத்து ரேஷன் கடைக்கும் உதவியாளர் நியமிக்க ரூபாய் 6000 கூடுதலாக வழங்க வேண்டும். திருச்சியில் நடைபெற்ற ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை.

Ad banner

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பழனிவேல் ராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தங்கபூமி, பீட்டர் சேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், நிர்வாகிகள்

எடத்தெரு கார்த்தி, பிரபு,பால முரளி,ரமேஷ், கார்த்திக்,துரை பாண்டி, ரகுபதி,மகளிர் அணி ஜீவிதா, உதயா, புவனேஸ்வரி, ரேவதி, ரேகா, மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.ரேஷன் கடை ஊழியர்களுக்கு கழிவறை வசதி செய்து தர வேண்டும். அனைத்து கடைக்கும் கட்டுநர் நியமிக்க வேண்டும். அல்லது உதவியாளர் நியமிக்க ரூபாய் 6000 கூடுதலாக வழங்க வேண்டும்.

ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். 8000 கார்டுகளுக்கு ஒரு கடை அமைக்க வேண்டும்.

தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தும் பொழுது ப்ளூடூத் செயல்பாட்டில் இருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.