காவு வாங்க காத்திருக்கும் அபாய சாக்கடை பல முறை புகார் அளித்தும் 2 மாதமாகியும் கண்டுகொள்ளாத திருச்சி பொன்மலை மண்டல உதவி ஆணையர்
திருச்சி பொன்மலை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள யூனியன் வங்கி எதிரில் பெரிய சாக்கடை ஒன்று ஓடுகிறது,இதில் பல மாதங்களாக அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அந்த வளாகத்தில் டீக்கடை நடத்தி வரும் மாற்றுத்திறனாளி மாரி என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த சாக்கடையை தூர்வாரக் கூறி அதிகாரிகளிடம் மனு அளித்து எந்த பயனும் இல்லை எனவே தாங்கள் உடனடியாக தூர்வார உத்தரவிட வேண்டும் என மனு அளித்தார் அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் சாக்கடையை மூடி இருந்த ஸ்லாப்புகளை அகற்றி சாக்கடை தூர்வாரப்பட்டது,ஆனால் அந்த ஸ்லாப்புகளை மீண்டும் மூடி வைக்காமல் சாக்கடை திறந்த நிலையில் உள்ளது,இதனால் இரவு நேரத்தில் தடுமாறி யாராவது சாக்கடையில் இருந்தால் உயிர்ப்பலி ஏற்படும் ஆபத்தான நிலையில் உள்ளது,மாற்றுத்திறனாளிகள் (பார்வையற்றோர் ஊனமுற்றோர் என ) பலர் இந்தப் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் மீண்டும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை,மேலும் பொன்மலை மண்டல உதவி ஆணையரிடம் பலமுறை நேரில் சந்தித்து புகார் கூறிய போதும் எந்த நடவடிக்கையும் இல்லை,போகும்போதெல்லாம் இன்னும் இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்களில் சாக்கடையை மூடி விடுவோம் எனக் கூறும் உதவி ஆணையர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார், திமுகவை சேர்ந்த இந்த வார்டு மாமன்ற உறுப்பினரும் வசூல் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறதாகவும் கூறப்படுகிறது, 

உயிர் பலி ஏற்பட்டால் மட்டுமே சாக்கடை மூடப்படுமா? என்பதை சமூக ஆர்வலர்களின் கேள்வி

