Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட வியாபார கழகம் சார்பில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட வியாபார கழகம் சார்பில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Ad banner

திருச்சி மாவட்ட வியாபாரக் கழகம், மும்பை போரம் ஆப் ஃபிரி எண்டர்பிரைசஸ் சார்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட வியாபாரக் கழக துணைத் தலைவர் ஞா ரேன்சன் தாமஸ் ஆரோக்கியராஜ், செயலாளர் அ.ஜார்ஜ் ராய் ஆகியோர் தலைமை தாங்கி வழி நடத்தினர் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் துளசி கே.பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

இதில் 12 கல்லூரிகளைச் சேர்ந்த 55 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள் காவேரி மகளிர் கல்லூரி மாணவி, லக்க்ஷிதா பிரவீன் முதல் பரிசும், காவேரி மகளிர் கல்லூரி மாணவி, பிரியா இரண்டாவது பரிசும் எஸ்.ஆர். எம். கல்லூரி மாணவி யாஸ்மின் பேகம் மூன்றாம் பரிசும் பெற்றனர். சிறப்பாக பேசியவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி மாவட்ட வியாபாரக் கழக துணைத் தலைவர் ரேன்சன் தாமஸ் ஆரோக்கியராஜ், பொருளாளர் கே.டி.தனபால், உதவி செயலாளர் பா.பத்திநாதன், இயக்குநர் ப.மகாலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அ.பாலசுப்பிரமணியன், என் கே.இஸ்மாயில்கான், கே. பாலகிருஷ்ணன் ராவ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். நடுவர்களாக மைதிலி முத்துவேல், பாரதிதாசன் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராஜாராம், டிஜிட்டல் லீடர் மேனேஜிங் டைரக்டர் முருகானந்தம் ,மற்றும் திருச்சி மாவட்ட வியாபார கழக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் மேலாளர் எம்.அருள் ஜெ சகாயராஜ் மற்றும் திரளான மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்

முடிவில் உதவி செயலாளர் பா.பத்திநாதன் நன்றி கூறினார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.