பாண்டிச்சேரி மதுபானம் கடத்தி வந்த 2 வாலிபர்களை கைது செய்த திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார்
இன்று 24.09.2026 மதியம் மும்பையில் இருந்து மதுரை செல்லும் விரைவு வண்டியில் முன்புறமுள்ள பொதுப் பெட்டியில் திருச்சி மாநகர கன்டோன்மென்ட் காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் திருச்சி இருப்பு பாதை சிறப்பு ரோந்து அலுவல் அதிகாரிகள் திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 1 ல் நடத்திய சோதனையில் வெளிமாநில ( பாண்டிச்சேரி) மது பாட்டில்கள் 750.ml அளவு கொண்ட 19 பாட்டில்கள் பறிமுதல் செய்து அதை எடுத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் அருண் (வயது 22) மற்றும்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செண்பகமூர்த்தி என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 22 ) ஆகிய இருவரையும் கைது செய்து
திருச்சி , கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர் திருச்சி இரும்பு பாதை ரயில்வே போலீசார் .

