Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகம், மருத்துவமனையில் திருடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகம், மருத்துவமனையில் திருடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது.

Ad banner

திருச்சி மாநகராட்சி மண்டல குழு அலுவலகம் – 4 (பொன்மலை கோட்டம் ) திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் செயல்பட்டு வருகிறது. அங்கு குப்பை அள்ளும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வாகனங்களில் இருந்த நான்கு பேட்டரிகள் திருட்டு போனது. இதுகுறித்து தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சூப்பர்வைசர் கர்ணன் கண்டோன்மென்ட் காவல் நிலையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் பேட்டரிகள் திருடியதாக தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்த மணியரசன் என்கிற அழகு, கார்த்திக் ஆகிய இருவரை கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார்கைது செய்தனர், அவர்களிடமிருந்து இரண்டு பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது

இதேபோல் திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அலுமினியம் கதவிற்கான சாமான்களை திருடியதாக மருத்துவமனை டாக்டர் வேல்குமார் அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்கு பதிந்து அகமது ரியாஸ்கான், சையது முஸ்தபா ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தார். மேலும் பிடிபட்ட 17 வயது சிறுவனை தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.