திருச்சி மாநகர பகுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கடைகளில் கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை.
இன்று திருச்சி மாநகர பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை.
கடைகளில் புகையிலை பொருட்கள் இருக்கிறதா என கண்காணிப்பு…
தமிழ்நாட்டில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடுக்க காவல் துறையினர் தீவிர அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதே போல் திருச்சி மாநகரில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் இன்று போலீசார் பஸ் நிலையம் உள்பட மாநகர் முழுவதும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம்,கன்டோன்மெண்ட்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை,நீதிமன்றம் சாலை ஆகிய பகுதிகளில் போலீசாஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன்,சக்திவேல் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் குட்கா,புகையிலை,பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கூறும்போது:-

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தடுக்க டீக்கடை,பெட்டிக்கடை,மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.தொடர்ந்து சோதனை நடத்த உள்ளோம்.தடையை மீறி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்

