பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று, கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி, கர்நாடக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது..இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, பெங்களூரு கப்பார்க் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார் இந்த பெண் இன்ஸ்பெக்டர்.. KSISF எனப்படும் கர்நாடக மாநில தொழில்துறை பாதுகாப்புப் படையில் ஏற்கனவே பணியாற்றி விட்டு, இப்போது இந்த பணிக்கு வந்துள்ளார்.கடந்த 2024-ம் ஆண்டு ஹிண்டல்கா மத்திய சிறையில் அவர் பணியில் இருந்தபோது, அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி சாய்குமாருடன், பெண் இன்ஸ்பெக்டர் நெருக்கமாக பழகியுள்ளார். துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியைச் சேர்ந்தவராம் அந்த ரவுடி சாய்குமார்.
அப்போது இருவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாகவும், அந்த பெண் அதிகாரி தனது ஆடைகளை கழற்றும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை ரவுடி சாய்குமார் தன்னுடைய செல்போனில் சீக்ரெட்டாக பதிவு செய்துவிட்டு, இப்போது சமூக வலைதளங்களில் கசியவிட்டுள்ளதாக தெரிகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இன்ஸ்பெக்டர், தன் மீது சதி செய்து நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் தர்மா, சாய்குமார் மற்றும் சிலருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். புகார் அளித்த கையோடு அவர் இப்போது விடுமுறையிலும் சென்றுவிட்டார்.
இதனிடையே, இந்த விவகாரம் இன்னொரு கோணத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதி சாய்குமாரும் அந்த பெண் அதிகாரி மீது, எதிர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில், ஹிண்டல்கா மத்திய சிறையில் இன்ஸ்பெக்டராக இருந்த அந்த பெண்மணி, தன்னிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, ஜெயிலுக்குள் செல்போன்கள், மதுபானங்கள் , பல ஆடம்பரப் பொருட்களை விநியோகித்தார்” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தத் தொடர்பின் மூலமே அந்த செல்போன் ஜெயிலுக்குள் ரகசியமாகப் பயன்படுத்தப்பட்டு, வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு மிரட்டுவதாகவும் சாய்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் பெண் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டது.பெண் அதிகாரி மீதான இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, இன்னொரு புதிய வீடியோ வெளியானது.. அதில், சிறை அதிகாரிகள் மீது விபச்சாரத் தொழில் நடத்துதல், தடைசெய்யப்பட்ட பொருட்களை அனுமதித்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது.
தங்கள் மீது அவதூறு பரப்பிய இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன சிறை அதிகாரிகள், உடனடியாக பெலகாவி சிஇஎன் (CEN) காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.தற்போது இந்த விவகாரத்தில் 2 தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ளதால், சம்பந்தப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஜெயிலுக்குள் கைதிகளுக்கு எப்படி செல்போன்கள், மதுபானங்கள் எளிதாகக் கிடைக்கின்றன என்ற பாதுகாப்பு ஓட்டைகள் குறித்தும், உயர் அதிகாரிகளின் பங்கும் குறித்து விரிவான விசாரணையும் கையிலெடுக்கப்பட்டு வருகிறது. இது கர்நாடக அரசியலிலும் காவல்துறை வட்டாரத்திலும் மிகப்பெரிய புயலைக் கிளப்பி உள்ளது.எத்தனையோ காவல்துறையினர் நேர்மையை காக்கும் தூண்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. காக்கி சட்டைக்குள் ஈரம் கசியும் தாய்மையுடன் எத்தனையோ பெண் காவலர்கள் பொதுமக்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனாலும் சிலரின் இதுபோன்ற சட்டவிரோத செயல்களும் ஒழுக்கக்கேடுகளும் ஒட்டுமொத்த காக்கிச் சட்டையின் நற்பெயரையும் களங்கப்படுத்துவதுடன் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

