
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வில்வ நகர் வேல்முருகன் ஆலய வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வில்வ நகரில் காவல் தெய்வமாக அமைந்துள்ள அருள்மிகு வேல்முருகன் மற்றும் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு கடந்த 48 நாட்களாக மண்டல அபிஷேக பூஜைகளும் சிறப்பு தீபாரதனைகளும் நடைபெற்று பக்தர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதன் நிறைவாக நேற்று 108 சங்காபிஷேகம் மற்றும் புனித நீர் தெளித்து சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் வழங்கப்பட்டு வேல் முருகனுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு வேல்முருகனை அலங்கரித்து வில்வ நகர், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி ஆகிய பகுதிகளில் வில்வ நகர் கிராம மக்கள் புடை சூழ வான வேடிக்கையுடன் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வில்வ நகர் அருள்மிகு வேல்முருகன் மற்றும் காளியம்மன் கோவில் நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மற்றும் பொதுமக்கள் செய்திருந்தார்கள்.

