திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கட்சி ஆக்கப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கழக ஆக்கப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது
முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கழக வளர்ச்சி மற்றும் அமைப்புப் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று (24.07.2026) வெள்ளிக்கிழமை பொன்மலை பகுதியின் 7 வார்டுகள் மற்றும் திருவெறும்பூர் பகுதியின் 8 வட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், திருவெறும்பூர் பகுதி செயலாளர் சிவக்குமார், வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பி.எல்.ஏ.2 உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

