திருச்சி அருகே திருமணமான 8 மாதத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை .
திருச்சி பெட்டவாய்த்தலை ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 21 ) இவர் கஸ்தூரி ( 19) என்பவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார் அசோக்கின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செம்பிய வரம்பால் பகுதியாகும். திருமணத்துக்குப் பின் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபகாலமாக அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே சண்டைஏற்பட்டது .
இதனால் கடந்த ஏழாம் தேதி கஸ்தூரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார் பின்னர் அவர் திரும்ப வரவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அசோக் யாரும் எதிர்பாராத வகையில் மனைவி துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அசோக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கஸ்தூரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

