நாகர்கோயில் சிறை கைதி மர்ம சாவு.திருச்சி மத்திய சிறையிலும் இதே போன்று ஓசி டீம் என வைத்து கைதிகளை அடிப்பதாக தகவல் .உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் கோரிக்கை

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோயில் சிறை கைதி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணம் இயற்கையான மரணம் அல்ல, உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற நோக்கத்தோடு தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இச்சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும் திருச்சியில் உள்ள மத்திய சிறையிலும் ஓசி டீம் என்று வைத்துக்கொண்டு உள்ளே அடிப்பதாக பல புகார்கள் வந்துள்ளது. மாண்புமிகு நீதி அரசர்களால் சிறையில் அடைக்கப்பட்ட சிறைவாசிகளை அடிப்பது மனித உரிமைகளுக்கு மீறிய செயலாகும். ஆகையால் சிறைத்துறை டிஜீபி அவர்கள் இதை கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் உரிய நடவடிக்கை எடுத்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆன நிலையில் வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் நடப்பது போல் சிறையில் துன்புறுத்துவது என்பது ஏற்புடையதல்ல என திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி வி வெங்கட் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

