Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என ​அமைச்சரிடம் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மனு .

0

'- Advertisement -

Ad banner

திருச்சி பஞ்சப்பூர்  புதிய பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என அமைச்சரிடம் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கோரிக்கை மனு .

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் சி.ஐ.டி.யு. சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினருக்கு டாக்சி ஸ்டாண்டு அமைக்க இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

​இதுகுறித்து சி.ஐ.டி.யு திருச்சி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரன், மாவட்டத் தலைவர் சுரேஷ், பொருளாளர் ஆண்டனி சுரேஷ் மற்றும் நிர்வாகிகள்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்

கூறியிருப்பதாவது:-

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ மற்றும் டாக்சி ஸ்டாண்டுகள் அமைக்கக் கோரி, எங்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

​இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஆட்டோ ஸ்டாண்டிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது அது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், டாக்சி ஸ்டாண்டு அமைப்பதற்கு இன்னும் சில நாட்களில் அனுமதி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதற்காக நாங்கள் பல மாதங்களாகக் காத்திருந்தோம். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தாங்கள் எங்களுக்கு உரிய முறையில் உதவி செய்வீர்கள் என முழுமையாக நம்புகிறோம்.

​ஏற்கனவே திருச்சி பழைய மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி எங்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் டாக்சி ஸ்டாண்டுகள் மட்டுமே செயல்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் எங்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினருக்கு டாக்சி ஸ்டாண்டு அமைக்க உரிய இடம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.