திமுக முன்னாள் அமைச்சர் நேரு சகோதரரின் உதவியாளர் அதிரடி கைது..அடுத்தது யாரு சிக்குவார் என்ற பரபரப்பு

தமிழக அரசியலிலும், குறிப்பாகத் திருச்சி அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுகவின் மூத்த தலைவர் கே.என்.நேருவின் சகோதரரின் உதவியாளரான கவி பிரசாத்தை லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகத் துறை டெண்டர் முறைகேடு மற்றும் பணி நியமன முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஏற்கனவே தீவிர சோதனைகளை (ரெய்டு) நடத்தியிருந்தனர். அந்த சோதனைகளின் தொடர்ச்சியாகவே தற்போது கவி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கவி பிரசாத்திடம் தீவிர விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளது.
இந்த அதிரடி கைது நடவடிக்கை திமுக மற்றும் கே.என். நேரு தரப்புக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் இந்த விவகாரத்தில் வேறு யார் யாருக்குத் தொடர்பு உள்ளது, யார் சிக்குவார்கள் என்ற பரபரப்பு திருச்சி அரசியலில் தீவிரமடைந்துள்ளது.

