Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதலமைச்சர் பயண வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து விசாரணை.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி ஓடத்துறை பகுதியில் முதலமைச்சர்  பயண வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து விசாரணை.

திருச்சி காவிரி ஆற்றின் ஓடத்துறை பகுதியில் முதலமைச்சரின் பயணத்தடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. உடனே மாநகர போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த சரக்கு லாரியை, கிரேன் உதவியோடு அகற்ற முயன்றனர்.சரக்கு லாரியின் எடை அதிகமாக இருந்ததால், அதனை கிரேன் வாகனத்தால் அசைக்கக்கூட முடியவில்லை.

அதைத்தொடர்ந்து சரக்கு லாரியைச் சுற்றிலும் இரும்புத் தடுப்புகளை அமைத்து, கண்காணிப்பதற்காகப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உத்தரப் பிரதேசம் லக்னோ பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த லாரி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எதற்காக அந்த லாரியை அங்கு நிறுத்திச் சென்றார்கள் என தெரியவில்லை. சம்பந்தப்பட்ட டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.