இன்று கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.

கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இன்று கரூருக்கு செல்கிறார்.அங்கு 10 கி.மீ.தொலைவுக்கு ரோடு ஷோ செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உத்தரவு அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்காக ஏற்கனவே 2 முறை டெல்லி செய்தியை அலுவலகத்தில் விஜய் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.முதலமைச்சர் விஜய் கரூர் பயணம்
இந்த நிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அரசு விழா உள்ளிட்ட பள்ளி வேலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவதற்காக முதலமைச்சர் விஜய் இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் காலை 9:30 மணிக்கு முதல்வர் விஜய் புறப்படுகிறார்.
தனி விமானம் மூலம் காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக (டிவிஎஸ் டோல்கேட்,பழைய பால்பண்ணை, சஞ்சீவி நகர், சத்திரம் வழியாக கரூர் மாவட்டத்திற்கு முதல்வர் விஜய் செல்ல உள்ளார்.
கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் இன்று பிற்பகல் 12.15 மணிக்கு நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.
அதன்பின் பிற்பகல் 1.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு திருக்காம்புலியூர், கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, லைட் ஹவுஸ் முனை, திருமாநிலையூர், தாந்தோணிமலை மற்றும் காளியப்பனூர் வழியாக சுற்றுலா மாளிகை வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை சந்திக்க உள்ளார். இதையொட்டி, சாலையின் இருபுறங்களிலும் பாதுகாப்பு கருதி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்தும் முதலமைச்சர், பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்கிறார்.அப்போது, மணவாசி பகுதியில் ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள எவர்வென் கோத்தாரி புட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் கருணை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 32 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்குகிறார்.அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட பிறகு, மாலை 4.10 மணியளவில் கரூரில் இருந்து கார் மூலம் புறப்படும் முதலமைச்சர் விஜய் மாலை 6 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்துடைகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 7 மணியளவில் சென்னை திரும்ப உள்ளார்.
முன்னதாக சென்னையில் இருந்து கிளம்பி திருச்சி இன்று காலை திருச்சி விமான நிலையம் வரும் தமிழக முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.இந்த நிகழ்வில் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு,வழக்கறிஞர் நியூ மேன்,தென்னூர் பிரதீப்,கணேசன்,தந்துக்கடை சந்துரு மற்றும் ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

